×

இந்த தேர்தல் மூலம் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்

புவனகிரி, ஏப். 17: சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பு.முட்லூர், மஞ்சக்குழி, கீழமணக்குடி, அருண்மொழித்தேவன், ஆதிவராகநல்லூர், ஆயிபுரம், குறயாமங்கலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக மாவட்ட பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவனுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த மு.க. ஸ்டாலினும், ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து உள்ளனர். பாஜகவிற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து இன்று வலுவான தேர்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். பாஜகவை வீழ்த்துவதற்கு முதல் புள்ளியாக ஸ்டாலின் செயல்பட்டார். இந்த தேர்தல் மூலம் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

மழை, வெள்ளத்தின்போது தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பலமுறை வந்துள்ளார். காங்கிரசுக்கு பதிலாக திமுகதான் தனது எதிர்க்கட்சி என்பதைப்போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரசாரம் செய்து வருகிறார். காஸ் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் மோடிதான். 40 தொகுதியிலும் மு‌.க. ஸ்டாலின்தான் வேட்பாளராக இருக்கிறார். எனவே என்னை வெற்றி பெற செய்வதைவிட மு.க.ஸ்டாலினின் வியூகத்தை வெற்றி பெற செய்யுங்கள். சாதி, மத வெறுப்பு அரசியல், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை, கனிமவள கொள்ளை போன்றவற்றை தடுத்திட திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும், என்றார்.

The post இந்த தேர்தல் மூலம் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Modi ,Bhuvangiri ,Vishika ,Thirumavalavan ,Chidambaram ,Pu.Mudalur ,Manjakuzhi ,Geezamanakudi ,Arunmozhithevan ,Adivaraganallur ,Ayipuram ,Kurayamangalam ,Parangippet ,DMK ,MRKP Kathiravan ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி